நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...