நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு
நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு
நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு
நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு
நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு
நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு
இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்
ஆம் நமக்கு நம்மை சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ஆனால் நாமும் அதேபோல் அன்பாகவும் பண்பாகவும் ஆறுதலாகவும் யாரோ ஒருவருக்கு இருக்கிறோமா என்பதை தினம் தினம் யோசித்து இணைந்து பயணிப்போம்
யாரோ ஒருவர் நமக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் நமக்கு நாமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் நமக்கு நாமே ஊக்கமளித்து சுய ஊக்கம் அளித்து வாழ்க்கையை ஆனந்தமாக பயணிப்போம்
எப்பவும் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்
-சக்தி அம்மு
அருமை சக்தி..
ReplyDeleteThank you somuch
DeleteSuper..
ReplyDeleteThank you somuch
ReplyDeleteSuper thank you
ReplyDelete