சட்டென மூர்க்க கோபம் கொண்டிருக்கையில் ...
ஆழ்ந்த யோசனையோடு இருக்கையில் ...
எதிர்கால பழங்கால பிரச்சனைகளை நினைக்கையில்...
ஒருவர் மற்றொருவர் என்று வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போது...
தீவிர யோசனையின் போதோ சட்டென கவனம் ஈர்த்து தன் திசை நோக்கி சிரிக்க வைக்கும் குழந்தையின் செய்கையை என்னவென்று சொல்வது...
கடவுளின் வடிவமா குழந்தை!
தேவதையின் முகமோ !
இயற்கையின் அழகோ!
சிலிர்ப்பூட்டும் தென்றலின் சாயலோ!
ஆச்சர்யமூட்டும் கடல் அலையின் ஓசையா!
இவை எதுவுமில்லை குழந்தை குழந்தைதான்...
பேரன்பின் வடிவம்...
-Shakthi Ammu
அருமை
ReplyDelete