Skip to main content

குடும்ப தினம்

அப்பாவை ஹீரோ என்று சொல்லும் நம்மில் பல பேர் அம்மாவை ஹீரோயின் என்றோ முன்மாதிரி என்றோ சொல்வது அரிது...
அப்பா தான் அறிவை சொல்லி கொடுப்பவர் என்று சொல்லும் நாம் அம்மாவிற்கு அத்தகைய இடத்தை  கொடுப்பதே இல்லை ... அம்மாவிற்கு உணவு சமைப்பதே பிரதானமாக இருக்க கூடும் .... கடின உழைப்பாளி அப்பா தான் என்றெல்லாம் சொல்ல கூடும்... ஆனால் அதே கடின உழைப்பை அம்மா வீட்டில் கொடுக்காவிட்டால் நம் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறிதான்....
அம்மாவிற்கு எப்போதும் நாம் தியாகத்தையும் எளிமையையும் உழைப்பு சுரண்டலையும் கொடுக்காமல் சிறிது சுதந்திரம் கொடுப்போம்....
எனக்கு என் அம்மா தான் எல்லாமே.... சிறு வயதில் இருந்தே யார் பிடிக்கும் என்று கேட்டால் அம்மா என்று தான் சொல்லுவேன் இப்போதும் எப்போதும்....
 பெண்கள் தன் அப்பாவின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போடுவது சரிதான் ஆனால் திருமணம் முடிந்த உடனேயே தன் கணவர் பெயரை பின்னால் போட்டுக்கொள்வது எந்த காதலில் எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை...
ஆனால் ஆண்களில் யாருமே தன் மனைவி பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டதாக சரித்திரமே இல்லை....
எனக்கு என் அம்மா தான் குரு தெய்வம் தோழி எல்லாமுமாக இருக்கிறார்...
நான் என் அம்மாவின் பெயரைத்தான் சேர்த்திருக்கிறேன்...
என் அம்மாவின் பெயர் அமுதா அம்மு என்று தான் அழைப்பார்கள் எல்லோரும்...
அம்மு தான் எனக்கு எல்லாமே....
அன்னையர் தினத்தன்று எழுத முடியவில்லை....
தினமும் அன்னையர் தினம் தானே!....

-Shakthi Ammu

Comments

  1. அருமை!
    அன்னையின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டவரை இப்பொழுதுதான் பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்தும் பாராட்டும்!
    சொ.வினைதீர்த்தான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...