Skip to main content

சித்திரை திருவிழா

அழகர்

 விழாவின் நாயகன்
வருஷத்துல எல்லா நாளும் கொண்டாடுனும்னா அதுக்கு மதுரைல தான் இருக்கணும்...
அழகர கோவில்ல இருந்து வெளிய கூட்டிட்டு வர்ரதுல இருந்து திரும்ப மலைக்கு கூட்டிட்டு போய் விடுற வரைக்கும் ஆட்டம் கொஞ்சம் கூட குறையாம இருக்கும்...
பசியால யாருமே இருக்க மாட்டாங்க...
வழியெல்லாம் பசிக்கு ஊரெல்லாம் சோறு போடுவாங்க...
இந்த வெயில்ல யாரு வெளிய போரது மத்த மாவட்டத்துல உள்ளவங்க சொன்னாலும் கூட வெயிலே மேலுக்கு படாம ரஸ்னா மோர் -னு திரும்புன பக்கமெல்லாம் குடிக்கலாம்...
எங்க வீட்ல திருவிழாக்கு வினியோகம் பண்ண புளியோதரை தயிர் சாதம் சக்கரை பொங்கல்னு அமர்க்களமா ரெடியாகிட்டு இருக்கும் (கேட்டரிங் தொழில்)...
ஒரு பக்கம் ரெடியாகும் இன்னொரு பக்கம் வண்டில ஏத்தனு ஒரே பரபரப்பா இருக்கும்...
அதுனால வீட்ல எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சாமி பார்க்க முடியாது...
தனியாக எல்லாம் சென்று சாமி பார்த்திருக்கிறேன்...
அந்த பரவசமே தனி...
சாமி பாத்ததுமே ஒரு சந்தோசம் வரும் ஒரு திருப்தி வரும்...
மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை இல்லைதான் ஆனால் ஒரு வருஷம் அழகர பாக்கலனா 3 வருஷம் பாக்க முடியாம போயிரும்னு சொல்வாங்க...
அதே மாதிரி நடந்திருச்சு 2018 ல எங்க வீட்டு அழகன் பொறந்தான்... மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் நாளன்று தான் அழகர் வைகையாற்றில் இறங்கும் விழா...
அப்போது கூட ஆட்டோவில் வரும் போது எங்கயாச்சும் சாமிய பார்த்துரமாட்டோமானு ஒரு தேடல் இருந்துச்சு ஆனாலும் அந்த வருஷம் பாக்க முடியல...
2019 போன வருஷம் என் பையன் பிறந்தநாளன்று அழகர் ஆற்றில் இறங்கும் விழா செல்ல முடியவில்லை...
இந்த வருடம் கொரணா திருவிழாக்கு சாமியே வரல....ரொம்ப கஷ்டமாதான் இருக்கு....
தலைவர் இந்நேரம் கிளம்பி இருக்கணும்...
ஒரே ஆட்டமா இருந்திருக்கும் எப்படிலாம் ஆடனும்னு இரவெல்லாம் கூட தூக்கம் வராமா கனவுல பார்த்திட்டு இருப்போம் அழகர..
கனவுல  கூட நினைக்கல திருவிழா இப்டி நடக்காம போகும்னு ..
அடுத்த வருஷம் மொத்தமா சேர்த்து கொண்டாடுவோம் இப்போ பொறுமையா இருப்போம்😉
சித்திரை திருவிழா நாயகன் அழகரை மிஸ் பண்றோம்..
அருள் புரியட்டும்...

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...