Skip to main content

கார்த்திக் டயல் செய்த எண் film

S I need u I love u...
இப்பொழுதெல்லாம் அவள் சொல்லும் I love u களில் அவ்வளவு அன்பு அதிர்வலைகள் இல்லைதான்....வெறும் வார்த்தையாக தான் தெரிகிறது... 
முன்பெல்லாம் அவள் I Love u என்று சொன்னால் மிக நீண்ட நிமிடங்கள் வார்த்தைகள் இல்லாமல் உரையாடல்கள் நடந்தன ... இப்பொழுது I love u என்று சொன்னவுடன் I love u too என்று டைப் செய்து விட்டு அடுத்த வேலைக்கு ஆயத்தமாக முடிகிறது இருவருக்குமே...
அவ்வளவு ஒரு இணக்கமான ஒரு காதலில் இருந்து விட்டு திருமணத்திற்கு செல்வது என்பது கடினமான ஒன்று தான் ஆனால் நகர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் இல்லை சமுதாயத்தின் கட்டாயம்... அவளால் அந்த பந்தத்தை எளிதில் கைபற்றி கடந்து போக அல்ல வாழ முடிந்தது அவ்வளவு இயல்பாக அன்பாகவும் கூட...
இப்போதும் கூட தன் காதலை நிரூபிக்க தன் அன்பை வெளிப்படுத்த ஆவலாக இருந்தாலும் சட்டென்று அவள் காரணமின்றி ஏன் அழைப்பு விடுத்தாய் என்று கேட்கும் ஒற்றை கேள்வியில் உலகம் இப்படித்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயல்பு வாழ்க்கைக்கு நாமும் தயாராவது தான் உத்தமம் என்பது புரிகிறது...
வாழ்க்கை மிக நீண்டது...
காதல் அளப்பரியது...
But ever I need u bcoz I love u

#karthick_dial_seidha_enn
-Shakthi Ammu

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...