5 வயதில் அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமானு கேட்டா அம்மா தான் பிடிக்கும் என்று பிடிவாதமாய் சொன்னவள் தான்... பத்து வயதில் எரிந்த பாத்திரத்தில் நெற்றியில் இரத்தம் கசிவதை பார்ப்பதற்கு முன்பாக ஊரை கூட்டியவள் தான்.... 17 வயதில் கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் சமயத்தில் படிப்பை நிறுத்து என்று ஊறே கூடி நிற்காமல் சொல்லாமல் சொல்லின...21 வயதில் பட்ட மேற்படிப்புக்கு ஆயத்தமாகும் சமயத்தில் ஊறே கூடி நின்று திருமண ஏற்பாடு செய்தனர் ... எவ்வளவு வெற்று கோசங்கள் முழங்கின ... எவ்வளவு வசைபாடுகள்... எவ்வளவு மிரட்டல்கள்... எல்லாவற்றையும் துரும்பென கடந்து பட்ட மேற்படிப்பு முடித்தாயிற்று... திருமணம் முடித்தாயிற்று... எவ்வளவு சங்கடங்கள் இருப்பிணும் ... கஷ்டங்கள் பல கடந்த போதிலும்... துன்பம் பலவற்றை அனுபவித்த போதிலும் எந்த ஆண் நண்பர்களும் தந்தையோ அண்ணனோ கணவனோ தம்பியோ சித்தப்பாவோ பெரியப்பாவோ யாரும் யாரும் உதவில்லை(சிலர் விதிவிலக்கு) ... இனிமேலும் நம்பிக்கை இல்லை... எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் நீ எழுந்து நில் என்று என்னை கட்டி தழுவி முத்தமிடுவது அம்மு மட்டும் தான்... இப்போது என் மகன்.....