Skip to main content

தந்தையர் தினம்

5 வயதில் அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமானு  கேட்டா அம்மா தான் பிடிக்கும் என்று பிடிவாதமாய் சொன்னவள் தான்...
பத்து வயதில் எரிந்த பாத்திரத்தில் நெற்றியில் இரத்தம் கசிவதை பார்ப்பதற்கு முன்பாக ஊரை கூட்டியவள் தான்....
17 வயதில் கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் சமயத்தில் படிப்பை நிறுத்து என்று ஊறே கூடி நிற்காமல் சொல்லாமல் சொல்லின...21 வயதில் பட்ட மேற்படிப்புக்கு  ஆயத்தமாகும் சமயத்தில் ஊறே கூடி நின்று திருமண ஏற்பாடு செய்தனர் ... எவ்வளவு வெற்று கோசங்கள் முழங்கின ...
எவ்வளவு வசைபாடுகள்...
எவ்வளவு மிரட்டல்கள்...
எல்லாவற்றையும் துரும்பென கடந்து பட்ட மேற்படிப்பு முடித்தாயிற்று...
 திருமணம் முடித்தாயிற்று... 
எவ்வளவு சங்கடங்கள் இருப்பிணும் ... கஷ்டங்கள் பல கடந்த போதிலும்... துன்பம் பலவற்றை அனுபவித்த போதிலும் எந்த ஆண் நண்பர்களும் தந்தையோ அண்ணனோ
கணவனோ தம்பியோ சித்தப்பாவோ
பெரியப்பாவோ
யாரும் யாரும் உதவில்லை(சிலர் விதிவிலக்கு) ...
இனிமேலும் நம்பிக்கை இல்லை...
எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் நீ எழுந்து நில் என்று என்னை கட்டி தழுவி முத்தமிடுவது அம்மு மட்டும் தான்...
இப்போது என் மகன்... அன்பின் பெரு ஊற்று... பெரு நம்பிக்கையும் குழந்தை தான்...

பெண்ணுக்கு பின்னால் ஆணின் .......... இருக்குமா ... தெரில...
இப்போ எதும் தோணல

-Shakthi Ammu

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...