எனக்கே எனக்காக தனி இடம் கொடுங்கள் ...
எனக்கே எனக்கான பிடித்த உணவை உண்ண விடுங்கள் ...
எனக்கே எனக்காக கச்சிதமாக பொருந்தகூடிய உடையை உடுத்த விடுங்கள்...
எனக்கே எனக்கான மிக நீண்ட தூர பயணத்தை அனுபவிக்க விடுங்கள்...
எனக்கே எனக்கான சிகை ஒப்பனை அழங்காரத்தை செய்ய அனுமதியுங்கள்...
எனக்கே எனக்கான சின்னஞ்சிறிய ஆசைகளுக்கு தடை போடாமல் இருங்கள்...
எனக்கே எனக்காக எந்த ஒரு செய்கைக்கும் பெண்பால் என்பதை மட்டும் காரணம் காட்டாமல் இருங்கள்...
எனக்கே எனக்காக சின்ன சின்ன உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...
எனக்கு தெரியும் இதில் எல்லாவற்றிற்கும் உங்களால் முடியாது என்பதை நான் ஆழ்ந்த உறக்கத்தின் போதிலும் என் காதுகளில் ஒளித்து கொண்டே இருக்கிறது...
கடைசியாக ஒன்றை மட்டும் கேட்கிறேன்...
எனக்கே எனக்கான நேரத்தை மட்டும் கொடுங்கள்
செத்தொழிந்து போய்விட மாட்டேன்....
நான் வாழ வேண்டும் அவசரமாக பெருமூச்சை விட்டு அல்ல மிகவும் நிம்மதியாக ஆசுவாசமாக...
-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ🤔
#lonliness_happiness
-Shakthi Ammu
Comments
Post a Comment