நடுகாட்டில் தனியாக இருந்தேன் அனாதையாக கடும் காய்ச்சலின் போதும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை...
கடும் மன அழுத்தத்தில் இருந்தேன் பேசுவதற்கு அழைப்பு விடுத்தேன் யாரும் எடுப்பதாக இல்லை நேரம் இல்லை என்பதே பதிலாக சொன்னார்கள்...
பதவியில் இருப்பவர்களிடம் நானாக சென்று உரையாடல் நிகழ்த்தினேன் அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் நான் கேட்ட சொல் எதுவும் கேளாதது போல்...
என் முயற்சியை என் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கேட்டேன் எவரும் பதில் அளிக்கவே இல்லை...
மனம் உடைந்து போகவில்லை முடிந்து போகவில்லை தொடர்ந்து முயற்சி செய்தேன் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்...
இந்தத் திருக்குறளை மட்டுமே தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு என் உழைப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன்..
என்னிடம் பேசாத பல நண்பர்கள் அழைப்புமணியை தொடுக்கின்றனர்...
யாரோ ஒருவர் தன் உழைப்பினால் தான் நீ முன்னேறுகிறாய் என்ற வாக்கியத்தை வலியுறுத்துகிறார்கள்... யாரோ ஒருவர் நான் எப்போதும் உனக்கு உதவுவேன் என்ற பொன் வாக்கியத்தை ஆறுதலாக சொல்கிறார்கள்...
நான் என் மனதுக்குள் மெதுவாக சிரித்தேன் சற்றும் அகங்காரம் இன்றி...
என்னவெல்லாம் நடக்கட்டும் எதுவெல்லாம் நடக்க இருக்கிறதோ எல்லாமே தடையின்றி நடக்கட்டும் எல்லாவற்றையும் அந்த கடவுளின் திருவிளையாடல் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்...
ஒரு நிமிடம் சற்று சிரித்து கேட்கிறேன் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
Comments
Post a Comment