Skip to main content

love

பேசி பேசி தீராத காதல் கொஞ்சலுடன் முடியுமா...!
ஆரத்தழுவி முத்தமிடாத காதல் செவிகளின் சொற்களினூடே தொடர்பு கொள்ளுமா...!
பகிர்ந்துண்ணாத உணவும் பகிரப்படாத சாக்லேட்டும் மிச்சமிருக்கிறதா...!
கட்டியணைத்து பைக்கில் செல்லாத பயணமும் கை-கோர்த்து நடை செல்லாத பூங்காவும் ஏங்கி நிற்கின்றனவா..!
காலம் என்ன பொழுது விடியும் நேரம் என்ன அலைபேசி அனைந்து போகும் நேரம் என்ன...!
தென்றல் காற்று வீச கடற்கரையோரம் இருவரும் நிலவை பார்த்த வண்ணம் கதைப்போமா என் தங்கமே...?

சக்தி அம்மு

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...