Skip to main content

அம்மு

..
ஆயிரம் கதைகள் இருக்கிறது அம்முவிடம் பகிர..
பல நூறு சிந்தனைகள் இருக்கிறது அம்முவிடம் பேச..
சில பல பண்டங்கள் இருக்கிறது அம்முவின் கையாலே சாப்பிட...
செல்ல வேண்டிய இடங்கள் பெரிதாக இல்லை என்றாலும் பக்கத்தில் மிக அருகில் அமர்ந்து மடியில் சாய்ந்து பகிர சில கனவுகள் இருக்கிறது...

இந்த பொது முடக்கத்திலும் தனியாக ஊர் விட்டு ஊர் வந்து என்னை பார்த்து சென்றது எனக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான்..
ஏனெனில் பேரழிவு நிகழ்த்திய வர்தா புயலிலும் நீ வர வேண்டும் என்று நான் சொன்ன ஒற்றை சொல்லுக்காக வந்தது பேரன்பு பெரும் நம்பிக்கை என்றுதான் சொல்ல முடியும்...

உன் தைரியமும் கோழைத்தனம் வாழ்க்கையில் ஒற்றை சொல்லில் கூட இல்லாத நடத்தையும்தான் எனக்கு முண்ணூதாரனம்..

உனக்கிருக்கும் இந்த எல்லா குணமும் நடத்தையும் எனக்குமிருக்கிறது  அம்மு மிக வீரியத்துடனே இருக்கிறது..
வாழ்க்கையில் செல்ல வேண்டிய தூரம் மிக நீண்டது தான் ...
காத்திருக்கிறேன் என்பதை விட தவித்து கொண்டிருக்கிறேன் சாதாரண சந்திப்பிற்கு அல்ல ஓடோடி வந்து அரவணைத்து முத்தமிட்டு கதை பேசும் அந்த தருணத்திற்காக அந்த நிமிடத்திற்காக...
காத்திருத்தல் அவ்வளவு சுகமில்லைதான் அம்மு...
Love u ammu

-Shakthi Ammu

Comments

Popular posts from this blog

அவள்

 என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..

LONLINESS

தனித்து விடுவது  அவமானம்... தனித்து விடுவது அசௌகரியம்.. தனித்து விடுவது அநியாயம்... தனித்து விடுவது  துரதிருஷ்டம்... தனித்து விடுவது  பெரும் துன்பம்... தனித்து விடுவது பெரும் இழப்பு... தனித்து விடுவது  பெரும் துயரம்... தனித்து விடுவது பெரும் சோகம்... தனித்து நிற்க இவை அனைத்தும் இன்பமே....🌹 -Shakthi Ammu

Self Confidence

நாம் துவண்டு போகும் போதெல்லாம் யாராவது வந்து தோள் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் வருத்தமடையும் போதெல்லாம் யாராவது வந்து ஆறுதல் வார்த்தைகளை கூற மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் கோபமடையும் போதெல்லாம் யாராவது வந்து நம்மை ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் தோல்வியடையும் போதெல்லாம் யாராவது வந்து தட்டிக்கொடுத்து முன்னோக்கி செல்ல உதவ மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நாம் மிகுந்த பசியில் இருக்கும் போது யாராவது வந்து உணவளிக்க மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு நம் வாழ்க்கையில் தடுக்கி விழும் போதெல்லாம் துவண்டு போகும்போதெல்லாம் வருத்தம் அடையும்போதெல்லாம் கவலை எழும் நேரத்தில் எல்லாம் கோபமான தருணத்தில் எல்லாம் தோல்வியுறும் தருணத்தில் எல்லாம் யாரோ ஒருவர் நமக்காக ஏதும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குவது உண்டு இப்படி எல்லாவற்றிற்கும் யாரோ ஒருவன் நண்பணாக  இருக்கத்தானே செய்வார்கள் அவன் நண்பனாகவும் அண்ணனாகவும் தங்கையாகவும் தம்பியாகவும் தாயாக தந்தையாக இப்படி பல கோணங்களில் யாராவது ஒருவர் நம் வாழ்க்கையில் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஆம் நமக்கு நம்மை...