அடுத்த நாளுக்கான வேலையை செய்ய காத்திருக்கும் இரவு மிகவும் சுவாரஸ்யமானது.. அப்படி ரசித்து பிடித்து செய்யும் வேலையில் அசதி தெரியாது என்பார்கள்... அப்படி அந்த வேலை மூளையில் நடனமிட்டு கொண்டிருக்கும் வேளையில் சில பைத்தியக்காரத்தனங்கள் நடக்கும்.. நம்மை அறியாமலேயே பின் மண்டையில் சிரித்து ஒரு கணம் சற்று நிதானித்து அட வேலையப் பார்போம்னு நகர்ந்து போவோம் .. தன் தொழிலே உயிர் மூச்சாக இருந்து எந்த நேரமும் அதையே நினைத்து பசி தூக்கம் ஏதுமின்றி தற்செயலாக அவற்றையெல்லாம் செய்யும் பொழுது ஒரு வித திருப்தி கடைக்கும் பொழுது மனம் பெரு மூச்சு விடும்... இதையெல்லாம் நிறைய திரைப்பட இயக்குனர்கள் சொல்லி கேட்ருப்போம் கனவுகள் காணு தூக்கம் கொன்று .. இது கனவுகளின் செயல் நேரம் .. காண்பதற்கு இன்னும் கனவுகள் பல நூறு இருந்தாலும் சில கனவுகள் நடக்கும் பொழுது அணு அணுவாக அணுபவிப்பதில் வேறு ஏதேனும் சுகமுண்டா?? இப்படி ஒரு நாளுக்காக காத்திருந்தேன் ... என்னதான் சொன்னாலும் பிடித்ததை செய்தால் வாழும் போதே சொர்க்கம் தான் .... #am_back #2020_year_gifted #thank_god #be_yourself -Shakthi Ammu