போதையின்றி பலமணி நேரம் உன்னிடம் மட்டுமே உலறி கொட்ட முடியும் கண்மணி...
ஒரே வகுப்பறையில் ஒருநாள் கூட சேர்ந்து பயிலவில்லை ஆனாலும் படிப்பிற்கு காலமேது என்று நாமிருவரும் துணிந்து பயில ஆயத்தமானோம் ...
கல்விக்கூடத்திற்கே செல்லாமல் கல்வி பயில வேண்டும் என்பது காலத்தின் திருவிளையாடல்தானே கண்மணி...
நீயும் நாணும் புலம்பி கொட்டி தீர்க்கும் வார்த்தைகளை கேட்டு இந்த பிரபஞ்சம் கூட தன் காதுகளை மூடிக்கொண்டிருக்கலாம்..
நேர வரையறையின்றி நம் உதடுகள் தாளமிட்டுக் கொண்டிருக்கும் கண்மணி...
நீயும் நானும் விரும்பியதும் விரும்பாததும் ஒன்றாகிப் போனது இறைவனின் ஆசிர்வாதம்...
என்னுடைய வாழ்வின் உச்சகட்ட துன்பத்திலும் ஓ என்று சத்தமிட்டு அழுவதற்க்கு அரவணைத்து ஆறுதல் சொல்ல இல்லாவிட்டாலும் பத்து எண்களை தட்டியதும் மறுமுனையில் அன்பால் அரவணைத்தாய்...
ஆயிரம் மனிதர்கள் இருக்கலாம் ஆனால் இறைவன் கொடுத்த வரமாய் நீ இருப்பாய் கண்மணி...
கைபிடித்து கதை பேசி நடந்த தூரம் மிக நீண்டது அந்த வைகை நதிகரையோரம்...
என் செல்ல கோபத்தை எப்போதுமே அலட்சிய படுத்தாமல் அதை நகைச்சுவையாக்கி முத்தமிட்டு சமாதானப்படுத்த உன்னால் மட்டுமே முடியும் கண்மணி...
அதே குமார் மெஸ்ஸில் எஃகு லபாவும்..
அதே பன் புரோட்டா கடையில் நம் தார்மீக அண்ணன்களுடன் இன்னொரு முறை சாப்பிட செல்வோம் தயாராயிரு கண்மணி..
நாமிருவருக்குள்ளும் கோபமே படாமல் உலகத்தில் அனைத்து கோபங்களையும் கொட்டி தீர்த்துக்கொள்ள முடிவது காலத்தின் தவம்தானே கண்மணி....
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அந்த சாதாரண சந்திப்பிற்க்கு தாயாராயிரு கண்மணி...
அன்பு தோழிக்கு ஆயிரம் முத்தங்கள்..
பாசக்காரிக்கு இறைவனின் ஆசிர்வாதம்...
Mis u kanmani love u kanmani
Comments
Post a Comment