உடைந்து போன கண்ணாடி துண்டாய் சிதறி கிடந்தேன்
எழுந்து நிற்க முயன்றேன் கண்ணாடி முனைகள் கீறிட்டு உதிரத்தையே தந்தது...
தட்டுத்தடுமாறி சலசலக்க ஒருசேர முடியாது கதவின் முன் நிற்கிறேன் நின்ற கணத்திலேயே இரு கதவுகளும் தாழிடப்படுகிறது...
இயற்கை வனமொன்றில் சிறிது தூரம் நடை செல்ல முயல்கிறேன் முட்கள் நிறைந்த பாதையே தெரிகிறது...
சுக்குநூறாய் உடைந்த கண்ணாடி துண்டுகளை ஒருசேர இணைத்து ஒரு அழகான தேவதையை பார் என்கிறது அந்த அசரீரி
நான் அதிர்ந்து மகிழ்ந்து போனேன்
அந்த அசரீரி முகத்தை மட்டும் தேடிக்கொண்டிருக்கிறேன்....
-Shakthi Ammu
Comments
Post a Comment