உன் ஒற்றை சொல் போதுமெனக்கு என்னை சுக்குநூறாய் உடைத்தெறிய
உன் ஒற்றை சொல் போதும் என் கண்களின் கண்ணீர் வழிய
உன் ஒற்றை சொல் போதும் நான் அனாதை இல்லை என்பதை ஒரு நொடியில் உணர வைக்க
உன் ஒற்றை சொல் போதும் அழாது என்னை தேற்றி வழிநடத்த
உன் ஒற்றைச்சொல் போதும் தூங்காது பல மணி நேரம் வேலை செய்ய
மார்போடு அணைத்து ஆறுதளிப்பதை விட உன் ஒற்றைச் சொல் போதும் தானே
ஆம்!!!
அசரீரியாய் ஒலித்துக்கொண்டே இரு!
தன்னம்பிக்கை
கண்ணாடியில் என் முகம்
- Shakthi Ammu
Comments
Post a Comment