யாருடைய பிரிவுக்கும் துளிகளை சிந்தாத என் கண்கள் ஏனோ அவளுடைய பிரிவு கலங்க வைக்கிறது...
மீண்டும் மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் சிறு மழை தூரலை போல என் மீது அன்பு கொள்வது ஏனோ...
ஒவ்வொரு பிரிவின் போதும் இதுவே கடைசி தூரலாக இருந்து விட்டு போகட்டும் என்றெண்ணுகிரேன்...
ஆனாலும் மீண்டும் கண் முன் வந்து கட்டி போடும் உன் அன்பை கொலை செய்யவே துணிகிறேன்...
பிரிவின் வலியில்லாமல் இருக்கிறாயே என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்...
அப்பிரிவின் வலியை தந்து சென்றவள் நீ மட்டும்தான் இவ்வுலகில்..
என்னை விட்டுவிடு
விலகிவிடு
மன்றாடி கேட்கிறேன் மீண்டும் ஒருமுறை என்னால் அப்பிரிவை தாங்க இயலாது...
Comments
Post a Comment