சிறகடித்து வானம் தாண்டி பறக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை...
கூட்டினை விட்டு சிறிது தூரம் பயணித்து அடர்ந்த காட்டின் பசுமை வெளியில் இளைப்பாற வேண்டும்....
நோய்கள் பிரச்சனைகள் பசி தூக்கம் இவை எதுவுமின்றி குளிர்ந்த மலையின் உச்சியில் சென்று தவம் செய்ய வேண்டும் .....
துப்பாக்கியிலிருந்து சீறிப் பாயும் குண்டினை போல வானிலிருந்து விழும் மழை நீரை விட அடர்த்தியான நீர்வீழ்ச்சியில் சென்று குளிக்க வேண்டும்....
கள்ளங்கபடமற்ற நண்பர்களோடு சப்தமிட்டு கூச்சலிட்டு ஆடி பாடி மகிழ வேண்டும்...
கருமை நிற வெளியில் பூமியின் காதலியின் வெளிச்சத்தில் அமர்ந்து உண்ண வேண்டும்...
நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன...
காத்திருத்தல் அவ்வளவு சுகமில்லையோ!
-Shakthi Ammu
சின்னச் சின்ன ஆசை! சிறகடிக்கும் ஆசை!
ReplyDeleteநிறைவேற வாழ்த்துகள்
சொ.வினைதீர்த்தான்
காரைக்குடி
9443446388