Skip to main content

Posts

Showing posts from July, 2020

love

எவ்வளவு வயதானாலும் அன்பிற்கு ஏங்கும் மனத்தை என்ன செய்து தேற்றுவது...! வயதானால் எல்லாம் புரிந்துவிடும் என்று சொன்னார்கள்..! வயதானால் எல்லாம் பழகிவிடும் என்றார்கள்..! வயதானால் முதிர்ச்சி பல அனுபவங்களை தரும் என்றார்கள்..! வயதாக ஆக ஆக நிறைய புத்தகங்களின் அர்த்தங்கள் புரியும் என்றார்கள்..! வயதாக ஆக ஆக ஆன்மிகத்தில் அதீத நாட்டம் வரும் என்றார்கள்..! சட்டென்று பேரன்பு ஒன்றை எதிர் கொள்ளும் மனம் சற்று தடுமாறத்தானே செய்கிறது... அன்பிற்கு ஏங்கும் மனத்தை என்ன சொல்லி தேற்றலாம்...?? அது சரி அன்பிற்கு வானமே எல்லை... -Shakthi Ammu

dream

நடுகாட்டில் தனியாக இருந்தேன் அனாதையாக கடும் காய்ச்சலின் போதும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை... கடும் மன அழுத்தத்தில் இருந்தேன் பேசுவதற்கு அழைப்பு விடுத்தேன் யாரும் எடுப்பதாக இல்லை நேரம் இல்லை என்பதே பதிலாக சொன்னார்கள்... பதவியில் இருப்பவர்களிடம் நானாக சென்று உரையாடல் நிகழ்த்தினேன் அவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் நான் கேட்ட சொல் எதுவும் கேளாதது போல்... என் முயற்சியை என் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கேட்டேன் எவரும் பதில் அளிக்கவே இல்லை... மனம் உடைந்து போகவில்லை முடிந்து போகவில்லை தொடர்ந்து முயற்சி செய்தேன் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்... இந்தத் திருக்குறளை மட்டுமே தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு  என் உழைப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன்.. என்னிடம் பேசாத பல நண்பர்கள் அழைப்புமணியை தொடுக்கின்றனர்... யாரோ ஒருவர் தன் உழைப்பினால் தான் நீ முன்னேறுகிறாய் என்ற வாக்கியத்தை வலியுறுத்துகிறார்கள்... யாரோ ஒருவர் நான் எப்போதும் உனக்கு உதவுவேன் என்ற பொன் வாக்கியத்தை ஆறுதலாக சொல்கிறார்கள்... நான் என் மனதுக்குள் மெதுவாக சிரித்தேன் சற்றும் அகங்காரம் இன்றி... ...

love

பேசி பேசி தீராத காதல் கொஞ்சலுடன் முடியுமா...! ஆரத்தழுவி முத்தமிடாத காதல் செவிகளின் சொற்களினூடே தொடர்பு கொள்ளுமா...! பகிர்ந்துண்ணாத உணவும் பகிரப்படாத சாக்லேட்டும் மிச்சமிருக்கிறதா...! கட்டியணைத்து பைக்கில் செல்லாத பயணமும் கை-கோர்த்து நடை செல்லாத பூங்காவும் ஏங்கி நிற்கின்றனவா..! காலம் என்ன பொழுது விடியும் நேரம் என்ன அலைபேசி அனைந்து போகும் நேரம் என்ன...! தென்றல் காற்று வீச கடற்கரையோரம் இருவரும் நிலவை பார்த்த வண்ணம் கதைப்போமா என் தங்கமே...? சக்தி அம்மு

கொரனா

லாக்டவுண் முடிஞ்சதும் நல்லா ஊர் சுத்தணும்... ஈஷா போகணும் ரொம்ப நாள் ஆசை... எதாச்சும் ஒரு நல்ல குளிர் பிரதேசம் போகணும்... கடல்ல போய் நல்லா ஒரு ஆட்டம் போடணும்... மிக நீண்ட ரயில் பயணம் தனியா போகணும்.. புத்தகங்கள் படிச்சுட்டே காதுல பாட்டு கேட்டுட்டே இயற்கையோட கொஞ்சி பேசிட்டே...பிடிச்சத கிடச்சத சாப்டுட்டே எந்த பயமும் இல்லாம பெரும் நம்பிக்கையோட நீண்ட மிக நீண்ட ரயில் பயணம் போகணும்... காரும் விமானமும் எனக்காக சிறிது காலம் காத்திருக்கட்டும்... கொரனா இப்டியே இந்த உலகம் ஸ்தம்பிச்சு இருக்கும்னு துளி கூட நம்பிக்கை இல்ல, மீண்டு வீரியம் கொண்டு எழும் மனித குலம்... சீக்கிரம் மீட்டுவோம் பயணத்துல... அன்பின் வழி தொடரும் இவ்வாழ்க்கை... #lets_plan_for_the_journey #lockdown #thoughts #love #believe #withlove  -Shakthi Ammu

வாழ்க்கை

வலி மிகுந்தது வேதனை அற்றது... சுகமானது சுமையற்றது... வெளியில் கடுஞ்சொற்கள் மிக்கது அக்கறை மிகுந்தது... அவமானங்கள் ஆயிரம் ரசனை நூறாயிரம்...மன அழுத்தம் சில காலம் மன உளைச்சல் வாழும் காலம் எல்லாம்...(வாழ்க்கை) - Shakthi Ammu

அம்முவும் நானும்

சங்கடத்தில் நானும்... கஷ்டத்தில் நீயும் ... பகிர்தல் மட்டுமே பேரன்பானது... உன்னையும் என்னையும் துன்பத்தில் தள்ள ஆயிரம் கழுகுகள் வந்தாலும் நம்முள் நடக்கும் உரையாடலின் ஆயிரம் வார்த்தைகள் ஒரு கணம் திகைத்து நிற்கும் ‌..... அன்பு மட்டுமே பிரதானமானது.... பகிர்தல் மட்டுமே நிலையானது‌.. உலகத்தின் எந்த மூலையில் இருந்து எவர் வந்தாலும் என் கட்டளைக்காக என் ஒற்றை சொல்லுக்காக நீ ஏங்கி நிற்பதை பார்த்து சிந்திக்க தொடங்கினேன்...எப்போது நான் அம்முவாகிய தருணம் என்பதை‌... நீ வெகு தொலைவிலும் நான் இங்கும் இருப்பது காலத்தின் கட்டாயம்... எப்போதும் உன் கூடவே இருக்கும் வரத்தினை இறைவன் அருள வேண்டும் அம்மு... மெய் என்பதை ஊர் சொல்லும் நான்காயிரம் வார்த்தையில் ,நீ சொல்வாய் ஒரே வார்த்தையில்  மேலான அன்புடன்... உன் மடி மீது துயில ... உன் மெல்லிய குரலின் பாடலை கேட்க ... எழுந்து செல் என்று தைரியம் ஒன்றையே பிரதானமாக கொடுத்தது நீ தான் அம்மு.. #mis_u_ammu -Shakthi Ammu