.. ஆயிரம் கதைகள் இருக்கிறது அம்முவிடம் பகிர.. பல நூறு சிந்தனைகள் இருக்கிறது அம்முவிடம் பேச.. சில பல பண்டங்கள் இருக்கிறது அம்முவின் கையாலே சாப்பிட... செல்ல வேண்டிய இடங்கள் பெரிதாக இல்லை என்றாலும் பக்கத்தில் மிக அருகில் அமர்ந்து மடியில் சாய்ந்து பகிர சில கனவுகள் இருக்கிறது... இந்த பொது முடக்கத்திலும் தனியாக ஊர் விட்டு ஊர் வந்து என்னை பார்த்து சென்றது எனக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான்.. ஏனெனில் பேரழிவு நிகழ்த்திய வர்தா புயலிலும் நீ வர வேண்டும் என்று நான் சொன்ன ஒற்றை சொல்லுக்காக வந்தது பேரன்பு பெரும் நம்பிக்கை என்றுதான் சொல்ல முடியும்... உன் தைரியமும் கோழைத்தனம் வாழ்க்கையில் ஒற்றை சொல்லில் கூட இல்லாத நடத்தையும்தான் எனக்கு முண்ணூதாரனம்.. உனக்கிருக்கும் இந்த எல்லா குணமும் நடத்தையும் எனக்குமிருக்கிறது அம்மு மிக வீரியத்துடனே இருக்கிறது.. வாழ்க்கையில் செல்ல வேண்டிய தூரம் மிக நீண்டது தான் ... காத்திருக்கிறேன் என்பதை விட தவித்து கொண்டிருக்கிறேன் சாதாரண சந்திப்பிற்கு அல்ல ஓடோடி வந்து அரவணைத்து முத்தமிட்டு கதை பேசும் அந்த தருணத்திற்காக அந்த நிமிடத்திற்காக... காத்திருத்தல் அவ்வளவு சுகமில்லைதான...