Skip to main content

Posts

Showing posts from December, 2020

ஆங்கில புத்தாண்டு

2020 பல இன்னல்களை கொடுத்தாலும் மிகச் சிறந்த நினைவுகளை தந்து விட்டு சென்றிருக்கிறது... Thank you 2020😁 பூக்களுக்கு ஏது புத்தாண்டு  பூக்கள் தளராது சிரித்து தினமும் மலர்வதை போல  நாமும் தினமும் மலர்வோம் தேங்கி நிற்கும் குளமாக இல்லாமல் பாய்ந்து ஓடும் நதியாக நாமிருப்போம்  குழந்தைக்கு ஏது சினம் துக்கம் பொறாமை என்பதெல்லாம் கற்றல் ஒன்றை மட்டுமே கையில் ஏந்தி சிறு குழந்தையாக கற்றுக்கொண்டே செல்வோம் இந்த ஆண்டு மன அமைதி சந்தோசம் எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்து வாழ இப்பிரபஞ்சத்தை வேண்டிக்கொள்வோம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #shakthiammu #HappyNewYear2021  With Shakthi Ammu

ஊர்ப்பாசம்

ஒரு பெரு மாநகரம் கொடுக்காத நம்பிக்கையை... *ஒரு சிறு கிராமம் என்னுள் நம்பிக்கை விதையினை விதைத்துள்ளது... முகம் தேடி அன்பின் ஏக்கம் கொண்டு பேச சென்ற  மனிதர்கள் கொடுத்த பெரும் ஏமாற்றம் ... *அறிமுகம் இல்லா மனிதர்களின் இன்முகம் கூட நூறண்டு வாழ வழித்துணை செய்கிறது... வாகன நெரிசலும் இரைச்சலும் மிக்க ஒரு நரகம்... *வண்ண வண்ண பறவைகள் கீச்சிட்டு இருக்கும் ஒரு வனம்... சொந்த வாகனம் நிறுத்துவதற்கு இரவல் இடம் கேட்டு முகத்தில் அறைந்தார் போல் திருப்பி அனுப்ப பட்ட ஒரு மாநரகம்... *என் தலைமுறையே மகிழ்ந்து வாழ ஒரு அரண்மனை என் வீடு .... யாருமில்லா தனி அறையில் ஓங்கி அழுத ஒரு அறை... நோயுற்ற போதும் யாருமின்றி அனாதையாக வாழ்ந்த ஒரு சிறை.... *எங்கும் சிரிப்பொலி மட்டுமே இசைந்து இன்முகம் மட்டுமே வாழ்க்கை .. தவப்புதல்வன் இணைந்து நிற்கும் வாழ்க்கையின் பெரு ஒளி .... #Hatechn #love_tvl* #People_love_caring_unexpected

self confidence

உன் ஒற்றை சொல் போதுமெனக்கு என்னை சுக்குநூறாய் உடைத்தெறிய உன் ஒற்றை சொல் போதும் என் கண்களின் கண்ணீர் வழிய உன் ஒற்றை சொல் போதும் நான் அனாதை இல்லை என்பதை ஒரு நொடியில் உணர வைக்க உன் ஒற்றை சொல் போதும் அழாது என்னை தேற்றி வழிநடத்த உன் ஒற்றைச்சொல் போதும் தூங்காது பல மணி நேரம் வேலை செய்ய மார்போடு அணைத்து ஆறுதளிப்பதை விட உன் ஒற்றைச் சொல் போதும் தானே  ஆம்!!! அசரீரியாய் ஒலித்துக்கொண்டே இரு! தன்னம்பிக்கை கண்ணாடியில் என் முகம் - Shakthi Ammu