ஒரு மனிதன் பிறக்கும் போதே மிகவும் அச்சுறுத்தலோடும் அதி பயங்கரமான உலகத்தை எதிர்கொள்ள துணிவில்லாமல் அழுகிறானோ!
அவன் தன் வாழ்நாளில் எவ்வளவு முறைதான் இறப்பதற்கு முன் இறந்து விடலாம் என்னும் எண்ணத்தை மேற் கொள்கிறான்..
சதா கண் விழிக்காமல் கருப்பையின் இருட்டில் பாதுகாப்பாய் இருந்தும் இப்பூவுலகில் எப்பொழுதும் இருட்டை பார்த்து பயம் கொள்வது ஏனோ..
ஒவ்வொரு நாழிகையும் 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு' என்று ஒவ்வொரு உணவும் செரித்த பின்னர் கிடைத்தது தேவாமமிர்தமோ.. ஆனால் மருந்தே உணவாகிவிட்டது கண்டு பயம் கொள்கிறானோ...
மனிதன் எதற்காக இந்த தொடர் ஓட்டத்தை தொடர்கின்றான்...
நான்கு சுவர்களுக்குள் இருக்கும் மனிதர்களுக்காகவா..!
எதையோ தேடி அங்குமிங்கும் அலைகின்றான்..
பலரை வெறுக்கிறான்..
சிலரை ரசிக்கின்றான்..
வெகு சில நேரம் யாசகம் வேண்டி நிற்கிறான்..
யாரிடம் எதற்காகவோ...!
மொழி அறியாத சிறு குழந்தையிடம் தன் முகம் சுளித்து பாருங்களேன்
அக்குழந்தை கூட அருமையாக சொல்லிவிடும் வாழ்க்கையில் மனிதன் வேண்டுவது அன்பைத்தானே தவிர வேறொன்றும் நானறியேன் பராபரமே என்று
அன்பு செய்வோம் அன்பை தவிர வேறென்ன இந்த அற்ப வாழ்க்கையில் சாதித்து விடப்போகிறோம்..!❤️
அன்பு செய்வது அவ்வளவு சுலபமல்ல...அன்புக்கு முதல் படிக்கட்டே சகிப்புத்தன்மை.. அது இருந்து விட்டால் அன்பு என்ற வார்த்தை அழகானதாகி விடும்.. வாழ்த்துகள்..
ReplyDelete