என் அன்பின் இலக்கணமாணால் அவள்... என் பிணியறிந்து குணமடையச் செய்தவள்... தோல்வியின் போது கட்டியணைத்து கதகதப்பை உணரச் செய்தவள்... என் முதல் முத்தத்தை பெற்றவள்.. என் பொறுமையை கற்றுத் தந்தவள்... பேரிடியாய் பொழியும் என் கண்ணீர் துளியின் காரணமானால் அவள்... நெடு தூரம் நடைசெல்ல என் துணையுமானால் அவள்.. என் தாயுமானவள்... என் உறவின் அனைத்தும் முதலுமானவள் அவள்.. என் முதலும் கடைசி காதலியும் ஆனாள் அவள்... எங்கிருக்கிறாள் அவள் ?... வானில் தெரியும் நட்சத்திரம் ஒன்றாக மிண்ணி மறையட்டும் ...மீண்டும் ஒருமுறை என் கண்முன் தோன்றாமல் இருக்கட்டும் அவள்!!! - சக்தி அம்மு ..
யாருடைய பிரிவுக்கும் துளிகளை சிந்தாத என் கண்கள் ஏனோ அவளுடைய பிரிவு கலங்க வைக்கிறது... மீண்டும் மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் சிறு மழை தூரலை போல என் மீது அன்பு கொள்வது ஏனோ... ஒவ்வொரு பிரிவின் போதும் இதுவே கடைசி தூரலாக இருந்து விட்டு போகட்டும் என்றெண்ணுகிரேன்... ஆனாலும் மீண்டும் கண் முன் வந்து கட்டி போடும் உன் அன்பை கொலை செய்யவே துணிகிறேன்... பிரிவின் வலியில்லாமல் இருக்கிறாயே என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன்... அப்பிரிவின் வலியை தந்து சென்றவள் நீ மட்டும்தான் இவ்வுலகில்.. என்னை விட்டுவிடு விலகிவிடு மன்றாடி கேட்கிறேன் மீண்டும் ஒருமுறை என்னால் அப்பிரிவை தாங்க இயலாது...