Skip to main content

Posts

Showing posts from May, 2020

கார்த்திக் டயல் செய்த எண் film

S I need u I love u... இப்பொழுதெல்லாம் அவள் சொல்லும் I love u களில் அவ்வளவு அன்பு அதிர்வலைகள் இல்லைதான்....வெறும் வார்த்தையாக தான் தெரிகிறது...  முன்பெல்லாம் அவள் I Love u என்று சொன்னால் மிக நீண்ட நிமிடங்கள் வார்த்தைகள் இல்லாமல் உரையாடல்கள் நடந்தன ... இப்பொழுது I love u என்று சொன்னவுடன் I love u too என்று டைப் செய்து விட்டு அடுத்த வேலைக்கு ஆயத்தமாக முடிகிறது இருவருக்குமே... அவ்வளவு ஒரு இணக்கமான ஒரு காதலில் இருந்து விட்டு திருமணத்திற்கு செல்வது என்பது கடினமான ஒன்று தான் ஆனால் நகர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் இல்லை சமுதாயத்தின் கட்டாயம்... அவளால் அந்த பந்தத்தை எளிதில் கைபற்றி கடந்து போக அல்ல வாழ முடிந்தது அவ்வளவு இயல்பாக அன்பாகவும் கூட... இப்போதும் கூட தன் காதலை நிரூபிக்க தன் அன்பை வெளிப்படுத்த ஆவலாக இருந்தாலும் சட்டென்று அவள் காரணமின்றி ஏன் அழைப்பு விடுத்தாய் என்று கேட்கும் ஒற்றை கேள்வியில் உலகம் இப்படித்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயல்பு வாழ்க்கைக்கு நாமும் தயாராவது தான் உத்தமம் என்பது புரிகிறது... வாழ்க்கை மிக நீண்டது... காதல் அளப்பரியது... But ever I need u bcoz I love ...

baby's love

சட்டென மூர்க்க கோபம் கொண்டிருக்கையில் ... ஆழ்ந்த யோசனையோடு இருக்கையில் ... எதிர்கால பழங்கால பிரச்சனைகளை நினைக்கையில்... ஒருவர் மற்றொருவர் என்று வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்போது... தீவிர யோசனையின் போதோ சட்டென கவனம் ஈர்த்து தன் திசை நோக்கி சிரிக்க வைக்கும் குழந்தையின் செய்கையை என்னவென்று சொல்வது... கடவுளின் வடிவமா குழந்தை! தேவதையின் முகமோ ! இயற்கையின் அழகோ! சிலிர்ப்பூட்டும் தென்றலின் சாயலோ! ஆச்சர்யமூட்டும் கடல் அலையின் ஓசையா! இவை எதுவுமில்லை குழந்தை குழந்தைதான்... பேரன்பின் வடிவம்... -Shakthi Ammu

காத்திருத்தல்

சிறகடித்து வானம் தாண்டி பறக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை... கூட்டினை விட்டு சிறிது தூரம் பயணித்து அடர்ந்த காட்டின் பசுமை வெளியில் இளைப்பாற வேண்டும்.... நோய்கள் பிரச்சனைகள் பசி தூக்கம்  இவை எதுவுமின்றி குளிர்ந்த மலையின் உச்சியில் சென்று தவம் செய்ய வேண்டும் ..... துப்பாக்கியிலிருந்து சீறிப் பாயும் குண்டினை போல வானிலிருந்து விழும் மழை நீரை விட அடர்த்தியான நீர்வீழ்ச்சியில் சென்று குளிக்க வேண்டும்.... கள்ளங்கபடமற்ற நண்பர்களோடு சப்தமிட்டு கூச்சலிட்டு ஆடி பாடி மகிழ வேண்டும்... கருமை நிற வெளியில் பூமியின் காதலியின் வெளிச்சத்தில் அமர்ந்து உண்ண வேண்டும்... நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன... காத்திருத்தல் அவ்வளவு சுகமில்லையோ! -Shakthi Ammu

குடும்ப தினம்

அப்பாவை ஹீரோ என்று சொல்லும் நம்மில் பல பேர் அம்மாவை ஹீரோயின் என்றோ முன்மாதிரி என்றோ சொல்வது அரிது... அப்பா தான் அறிவை சொல்லி கொடுப்பவர் என்று சொல்லும் நாம் அம்மாவிற்கு அத்தகைய இடத்தை  கொடுப்பதே இல்லை ... அம்மாவிற்கு உணவு சமைப்பதே பிரதானமாக இருக்க கூடும் .... கடின உழைப்பாளி அப்பா தான் என்றெல்லாம் சொல்ல கூடும்... ஆனால் அதே கடின உழைப்பை அம்மா வீட்டில் கொடுக்காவிட்டால் நம் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறிதான்.... அம்மாவிற்கு எப்போதும் நாம் தியாகத்தையும் எளிமையையும் உழைப்பு சுரண்டலையும் கொடுக்காமல் சிறிது சுதந்திரம் கொடுப்போம்.... எனக்கு என் அம்மா தான் எல்லாமே.... சிறு வயதில் இருந்தே யார் பிடிக்கும் என்று கேட்டால் அம்மா என்று தான் சொல்லுவேன் இப்போதும் எப்போதும்....  பெண்கள் தன் அப்பாவின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போடுவது சரிதான் ஆனால் திருமணம் முடிந்த உடனேயே தன் கணவர் பெயரை பின்னால் போட்டுக்கொள்வது எந்த காதலில் எந்த காரணத்தினால் என்று தெரியவில்லை... ஆனால் ஆண்களில் யாருமே தன் மனைவி பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டதாக சரித்திரமே இல்லை.... எனக்கு என் அம்மா தான் குரு தெய்வம...

சித்திரை திருவிழா

அழகர்  விழாவின் நாயகன் வருஷத்துல எல்லா நாளும் கொண்டாடுனும்னா அதுக்கு மதுரைல தான் இருக்கணும்... அழகர கோவில்ல இருந்து வெளிய கூட்டிட்டு வர்ரதுல இருந்து திரும்ப மலைக்கு கூட்டிட்டு போய் விடுற வரைக்கும் ஆட்டம் கொஞ்சம் கூட குறையாம இருக்கும்... பசியால யாருமே இருக்க மாட்டாங்க... வழியெல்லாம் பசிக்கு ஊரெல்லாம் சோறு போடுவாங்க... இந்த வெயில்ல யாரு வெளிய போரது மத்த மாவட்டத்துல உள்ளவங்க சொன்னாலும் கூட வெயிலே மேலுக்கு படாம ரஸ்னா மோர் -னு திரும்புன பக்கமெல்லாம் குடிக்கலாம்... எங்க வீட்ல திருவிழாக்கு வினியோகம் பண்ண புளியோதரை தயிர் சாதம் சக்கரை பொங்கல்னு அமர்க்களமா ரெடியாகிட்டு இருக்கும் (கேட்டரிங் தொழில்)... ஒரு பக்கம் ரெடியாகும் இன்னொரு பக்கம் வண்டில ஏத்தனு ஒரே பரபரப்பா இருக்கும்... அதுனால வீட்ல எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சாமி பார்க்க முடியாது... தனியாக எல்லாம் சென்று சாமி பார்த்திருக்கிறேன்... அந்த பரவசமே தனி... சாமி பாத்ததுமே ஒரு சந்தோசம் வரும் ஒரு திருப்தி வரும்... மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை இல்லைதான் ஆனால் ஒரு வருஷம் அழகர பாக்கலனா 3 வருஷம் பாக்க முடியாம போயிரும்னு சொல்வாங்க... அதே மாதிரி ந...

meenakshi tirukalyanam

உலகத்தை ஆளும் சிவனே அடிபணிஞ்சாரு என் செல்ல மீனாட்சிக்கு... உலகத்தையே அரசன் ஆண்டு கொண்டிருக்க அரசாளும் ஆட்சி என் தங்க மீனாட்சி அரசியாக மதுரையில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்.... ஆணென்ன பொன்னென்ன அரசாளும் மீனாட்சி துணையிருக்க வேறென்ன குறை... சைவமும் வைணவமும் எதிரெதிர் நிற்க சிவனையும் பெருமாளையும் ஒரு சேர கொண்டாட வைத்தது அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்தில்... மதுரைகாரங்கே அடுத்த வருஷம் பட்டைய கிளப்புவோம்.... இந்த வருடம் எல்லோருக்கும் நல்லருள் புரியட்டும்... #மீனாட்சிதிருக்கல்யாணம் #2020 #சித்திரை திருவிழா - Shakthi Ammu

தவம் வரம்

சாதுவாகி ஏதுவாகி புன்னகைத்து தழுவல் வாய்ப்பது வரம்... கட்டியணைத்து முத்தமிட்டு அருகிலிருப்பது தவம்...